நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை - பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வரும் 9ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்திக்கிறார்.


நீலகிரி: நாட்டில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக 9-ந் தேதி காலை 7:15 மணியளவில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.



அங்கு வாகன சவாரி செல்லும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக 9.35 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு உணவு அளிப்பதுடன், மூத்த பழங்குடியின யானை பாகன்களை சந்தித்து காட்டு யானைகளை பிடிப்பது, அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அவர்களின் குறைகளையும் கேட்கிறார்.

பின்னர், டி 23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய 3 வேட்டை தடுப்பு காவலர்களையும் சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபன்ட் மிஸ்பரர் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் அதில் இடம் பிடித்த ரகு மற்றும் பூமி ஆகிய யானை குட்டிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் சிறப்பாக செயல்பட்ட 12 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள் மற்றும் 8 முன் களப்பணியாளர்களை பிரதமர் கௌரவிக்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக மைசூர் செல்கிறார்.



பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில், நிகழ்ச்சியை முடித்தபின் பிரதமர் மோடி மசினகுடியிலிருந்து ராணுவ ஹெலிகேப்டர் மூலம் மைசூர் செல்லவுள்ளார். இதற்கான ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை இன்று நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...