கோவை சங்கனூர் ஓடை சீரமைப்பு - பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு!

கோவையில் உள்ள சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் மு.பிரதாப், விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Tiupur: கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சங்கனூர் ஓடையானது தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் வழியாகப் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்புவரை நல்ல நீர் ஓடிக்கொண்டிருந்த இந்த ஓடை, தற்போது கழிவுநீர் கால்வாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த சங்கனூர் ஓடையை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.

இந்தப் பணிகளை மேற்கொள்ள 49 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும், சாலைகள் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, இந்தப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...