அரிக்கொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதியில் விட எதிர்ப்பு - வனத்துறை அலுவலகம் முற்றுகை!

இடுக்கி மாவட்டத்தில் 10 பேரை கொன்று வீடுகளை சேதப்படுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதியில்விட எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானால் சாந்தன் பாறை ஆகிய பகுதிகளில் 16 ரேஷன் கடைகள் மற்றும் 60.க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும் மற்றும் 10 பேரை கொன்ற யானையைப் பிடித்து பரம்பிக்குளம் பகுதியில் விடுவதற்கான 5 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.



இதைக் கண்டிக்கும் விதமாக பரம்பிக்குளம் மலைவாழ் மக்கள் 100.க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் 600 குடும்பங்கள் 2500 மக்கள் வசித்து வருகின்றனர்.



அரிகொம்பனை பிடித்து இப்பகுதியில் விட்டால் இங்குள்ள விவசாயிகளுக்கும் மற்றும் இப்பகுதி உள்ள பொதுமக்களும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், இப்பகுதியில் மக்கள் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதை இடிப்பதோடு பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு அச்சத்தோடு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்கள் தெரிவித்தனர்.



எனவே, அரிகொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்ற நிபுணர் குழுவின் முடிவை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட வனத்துறை வன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கைவிடுத்தனர்.



மலைவாழ் மக்கள் ஒன்று கூடி மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...