2024ல் ஜுப்லியன்ட் எக்ஸ்போ - கோவை ரேஸ்கோர்ஸில் முன்னோட்டம்!

கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஜுப்லியன்ட் எக்ஸ்போ- 2024 கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் தாஜ்விவான்டா ஓட்டலில் நடைபெற்றது.


கோவை: கோவையிலுள்ள ஜுப்லியன்ட் கோயமுத்துார் பவுன்டேசன் அமைப்பு, ஜுப்லியன்ட் கோயமுத்துார் 2024 வளர்ச்சிமிகு கொங்குநாடு என்ற தொழில்முனைவோர்களுக்கான உதவும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு சார்பில் ஜுப்லியன்ட் எக்ஸ்போ 2024 என்ற பிரம்மாண்ட கண்காட்சி மற்றும் மாநாடு கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற 20 நாடுகளில் இக்கண்காட்சி குறி்த்த விழிப்புணர்வு ‘ரோட்ஷோ’நடத்தப்படுகிறது.

ஜவுளி, உணவு, தங்கநகை உற்பத்தி, கட்டுமானம், காகிதம், தகவல் தொழில் நுட்பம், ரயில்வே, தொலைதொடர்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை உள்ளிட்டவை அடங்கும். இதன் வாயிலாக கோவையில் புதிய பொருளாதார மண்டலங்கள் உருவாகும். தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வர்த்தக பூங்காக்கள் உருவாகும்.

இக்கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 10 முதல் 12 வரை கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் நடக்கிறது. இக்கண்காட்சியில் 300 நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. 5,000 முதல் 8,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சர்வதேச அளவில் 20 நாடுகளை சேர்ந்த 300 தொழில்துறையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியை ‘பேம்’தமிழ்நாடு மேலாண் இயக்குனர் சிகிதாமஸ் வைத்தியன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில், ஜுப்லியன்ட் கோயமுத்துார் பவுன்டேசன் அமைப்பு தலைவர் அபுதாஹீர், இயக்குநர்கள் சதீஷ்குமார், சந்தோஷ், முகமதுநாசர், அருண், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன், இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் அருணாசலம், கொடிசியா தலைவர் திருஞானம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும், தொழில் முனைவோர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...