உடுமலை அருகே விவசாயிக்கு கத்திக்குத்து - தப்பியோடிய தலைமைக் காவலருக்கு போலீஸ் வலை

உடுமலை அருகே நிலத்தகராறில் விவசாயி ரங்கநாதன் என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே இராவணபுரம் ஊராட்சிக்கு அருகே உள்ள வளையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பாக பலரிடம் வட்டிக்கு பணம்பெற்று விட்டு திருப்பி தரவில்லை.

இதனை தொடர்ந்து, அவருக்கு பணம் கொடுத்த அனைவரும் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு போட்டனர். அதன்படி 2008 ஆம் ஆண்டு அவரது விளைநிலம் 10.5 ஏக்கர் ஏலம் விடப்பட்டது. அதனை ரங்கநாதன் என்ற விவசாயி ஏலத்தில் எடுத்துள்ளார்.

அதன் பிறகு, இந்த நிலத்தை அவரிடம் ஒப்படைக்க மறுத்து தங்கவேல் பலமுறை ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் இந்த நிலம் ரங்கநாதனுக்குதான் சொந்தம். எனவே, இதை சுவாதீனப்படுத்தி ரங்கநாதனிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, தளி காவல் நிலையத்தில் நிலத்தை கையகப்படுத்தும்போது பாதுகாப்பு வேண்டுமென கூறப்பட்டது.



காவல்துறையினர் வருவாய்த் துறை மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இந்த நிலத்தை சுவாதீனப்படுத்த சென்றபோது இந்த நிலத்தின் உரிமையாளர் தங்கவேலின் மகன் செந்தில் என்பவர் கத்தி எடுத்து ரங்கநாதனை இரண்டு இடங்களில் சராசமாரியாக குத்தினார்.

அதில் ரங்கநாதன் படுகாயம் அடைந்தார். ரங்க நாதனை குத்திய செந்தில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

மேலும் காவலர் செந்திலின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட செந்திலை, அவரது சகோதரர் முத்துக்குமார், அவரது தந்தை தங்கவேல் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து அடியாட்களுடன் வந்த சேகர் என்ற நபர் உட்பட பலர் தப்பி ஓடி விட்டனர்.

இச்சம்பவம் குறித்து தளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் காயமடைந்த ரங்கநாதன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடுமலை அருகே நிலத்தகராறில் விவசாயியை, தலைமைக் காவலர் ஒருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...