வால்பாறை - பொள்ளாச்சி சாலையை மறித்த யானைகளால் பரபரப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள புதுதோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மூன்று காட்டு யானைகள் சாலையை மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் பயந்து வாகனங்களை நடுவழியிலேயே நிறுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதி சாலை ஓரங்களிலும் சுற்றி வருகிறது.



தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் வனவிலங்குகள், தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.

இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியிலிருந்து மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்ற யானைகளை பார்த்து பயந்து வாகனங்களை நிறுத்தினர்.



சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் சாலையை கடந்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து நின்றது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்பு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...