உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில், அரசு துறைகள் ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்து வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.



அதனால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு உழவர் சந்தை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் செய்யப்பட்டது.



இந்த முகாமில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சந்தன கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...