உதகை அருகே அதிகாலையில் உலா வந்த கரடியால் பரபரப்பு - சிசிடிவி வீடியோ

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகாலையில் கரடி ஒன்று உலா வந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.



நீலகிரி: உதகை அருகே அதிகாலை நேரத்தில் கரடி உலா வந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமடைந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவாகிறது. இதேபோல் இன்று அதிகாலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்காக எமரால்டு பஜார் பகுதிக்கு வந்தனர்.



அப்போது கரடி ஒன்று திடீரென வந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...