வால்பாறை பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளியை ஒட்டி கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.


கோவை: புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை சுமந்து மலை மேல் ஏறி கிறிஸ்துவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள கிருஸ்துவ ஆலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு கல்வாரி மலையில், சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை நினைவு கூறும் வண்ணம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் 40 நாட்கள் நோன்பு தினமாக கடைப்பிடித்து வந்தனர்.



இன்று புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு, வால்பாறையில் உள்ள csi ஆலயம், தூய இருதய ஆலயம், பெந்தகோஷ்தே ஆலயம் போன்ற கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இந்த நாளை அனுசரித்தனர்.



ரொட்டிக்கடை பகுதியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில், சிலுவையை தோளில் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின்மேல் ஏறி சிலுவை சுமந்து சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மலை மீது ஏறி இயேசு கல்வாரி மலையில் சிலுவை சுமந்து சென்றதைப் போல் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்து சென்று 14 இடங்களில் பிரார்தனை செய்து மலை மேல் சென்று சிலுவை வைத்து பிரார்த்தனை செய்து வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...