கோவை தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, எம்பி., பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்தும், ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளை பிரதமர் மோடிக்கு அஞ்சல் அட்டை மூலம் கேள்வி எழுப்பும் இயக்கத்தை கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று தொண்டாமுத்தூரில் தொடங்கப்பட்டது.


கோவை: தொண்டாமுத்தூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடிக்கு அஞ்சல் அட்டை மூலம் கேள்வி எழுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூரில் மோடியின் பாசிச பாஜக அரசின் தன்னிச்சையான போக்கு மற்றும் ஜனநாயக படுகொலையை கண்டித்து தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவரை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதை கண்டித்தும், அவர் எழுப்பிய அதே கேள்விகளை நாட்டின் குடிமக்களாக பிரதமர் மோடிக்கு அஞ்சல் அட்டை மூலம் கேள்வி எழுப்பும் இயக்கத்தை கோவை வடக்கு மாவட்டத்திற்குட்டப்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று தொடங்கப்பட்டது.



இந்த நிகழ்வுக்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். 77ஆவது இளைஞர் காங்கிரஸ் வார்டு தலைவர் சரவணகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவீன்குமார், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கோவை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கோவை அனிஃபா, சக்தி சதிஷ், மாவட்ட செயலாளர் சாமிநாதன், காமராஜ் துல்லா, செல்வபுரம் சர்க்கிள் தலைவர் பொன்ராஜ், R.S புரம் சர்க்கிள் தலைவர் மணி, எஸ்.பி பிரிவின் மாவட்டதலைவர் பேரூர் மயில், இளைஞர் காங்கிரஸ் தொண்டாமுத்தூர் வட்டார தலைவர் சச்சிதானந்த மூர்த்தி,



இளைஞர் காங்கிரஸ் குனியமுத்தூர் சர்க்கிள் தலைவர் அப்பாஸ், இளைஞர் காங்கிரஸ் 72ஆவது வார்டு தலைவர் ராஜ் குமார், இளைஞர் காங்கிரஸ் 71ஆவது வார்டு தலைவர் ராஜேஷ், இளைஞர் காங்கிரஸ் 86ஆவது வார்டு தலைவர் நிஷார்,சௌந்தர், முரளி, தாண்டவமூர்த்தி,பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு 5000 பொதுமக்களிடமிருந்து அஞ்சல் அட்டை மூலம் கேள்விகள் எழுதி வாங்கப்பட இருக்கிறது. அதன் ஒரு தொடக்கமாக இன்று செல்வபுரம் பகுதியில் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...