உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). இவர் நண்பர்களுடன் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர், நீரில் முழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் மிடாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). தந்தையுடன் இணைந்து விவசாயப் பணிகளை கவனித்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாயார் கீதா மற்றும் தந்தை ராஜாமணியுடன் வசித்து வந்தார்.



இந்த நிலையில் சுரேஷ்குமார் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மடத்துக்குளத்தை அடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளித்துள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற நண்பர்கள் முயற்சி செய்தும், முடியாமல் ஆற்று நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக உடுமலை தீயணைப்புத் துறை மற்றும் மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அமராவதி ஆற்றில் மிதவைகள் உதவியுடன் தேடினர்.



நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆற்றில் மூழ்கிய சுரேஷ்குமாரை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...