அனைத்து மாவட்டங்களிலும் அரசு நர்சிங் பயிற்சி மையம் தொடங்கப்படும்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று கோவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அருகே புதிதாக தொடங்கப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாக துவங்கப்பட்ட நர்சிங் கல்லூரியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதல்வர் துவக்கி வைத்த இந்த கல்லூரியின் புதிய அங்கமான நர்சிங் கல்லூரியை துவக்கி வைப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், நர்சிங் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில், தமிழகத்திலிருந்து வரும் நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதற்கு காரணம் அன்னை தெரசாவின் தாயுள்ளம் மற்றும் சேவை மனப்பான்மையோடு தமிழக நர்சிங் கல்லூரிகள் மனிதாபிமான முன்னுரிமையில் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது, இது குறித்து ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட சுகாதார துறை இயக்குனர் டாக்டர் அருணா, அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மருத்துவர் கந்தசாமி, ஏ.ஜே.கே.கல்லூரி முதல்வர் பிருந்தா, ஊராட்சி துணை தலைவர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...