திருப்பூர் அருகே காலி கேஸ் டேங்கர் லாரியில் தீவிபத்து - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு, சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. ஈரோடு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது38) அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தியபோது, டிரைவர் இருக்கையின் இடது புறம் தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டார்.



அப்போது, தீ மளமளவென பரவியதால் அச்சமடைந்த டிரைவர் ரவி, வண்டியிலிருந்து எட்டிக் குதித்து தப்பியோடினார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது.



கேஸ் சிலிண்டர்கள் எதுவும் லாரியில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...