தரம் உயர்த்தப்பட்ட காங்கேயம் அரசு மருத்துவமனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர்ப் பலகையை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். மேலும், ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரச மருத்துவமனை சமீபத்தில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.



இதனை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்தார்.



மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை அப்போது நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, காங்கேயம் வட்டம் சாவடிப்பாளையத்தில் 48 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அவிநாசி ஊராட்சிக்கு உட்பட்ட நம்பியம்பாளையம் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தாயம் பாளையம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின்போது மாநில செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...