கோவையில் குரும்பா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை!

குரும்பா இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்து எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும், குரும்பா இன மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: அரசியல் பிரதிநிதித்துவம், எஸ்டி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பா சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமை வகித்தார். குரும்பா குரும்மன்ஸ் சமுதாய மக்களை உடனடியாக பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்த்து ST சான்றிதழ் வழங்கிட வேண்டும், ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கே கொடுத்திட வேண்டும், ஆடு மேய்க்கும் மற்றும் கம்பளி நெய்தல் போன்ற எங்களது குலத்தொழில் அழிந்து வருவதால் ஆராய்ந்து உரிய காப்பீடு திட்டம் அமைக்க வேண்டும், குரும்பா குரும்மன்ஸ் சமுதாயத்திற்கு அரசியல் அதிகாரத்தில் உள்ள பிரதிநிதித்துவம் கொடுத்து தமிழ்நாடு மாநில அளவில் தகுதியுள்ள குரும்பா குரும்மன்ஸ் இன மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உரிய அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், 50 லட்சம் பேர் உள்ள சமுதாயத்திற்கு உரிய அரசு அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது, சமுதாயத்தை புறக்கணிப்பதற்கு சமம் என்றும் ஆகவே உடனே அரசியல் அங்கீகாரம் வழங்கிட அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசையும் வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட குரும்பர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பதகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் பொன் சுரேஷ்பாபு, பொருளாளர் கிருஷ்ணசாமி, குரும்பா சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் தேவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் முருகேஷ் மற்றும் ராஜேஷ் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...