கோவையில் கல்லூரி மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பு - கடை உரிமையாளருக்கு தர்மஅடி!

கோவை பி.என்.பாளையத்தில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் ராமு என்பவர், கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், பெண்களை தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், கடை உரிமையாளர் ராமுவை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது41). இவர் வீட்டின் அருகே ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, மனைவி இறந்த நிலையில் தனது 21 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் இவரது கடைக்கு வந்த தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வரும் தயாநிதிமாறன் என்ற மாணவர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அப்போது, ராமுவின் செல்போனில் கல்லூரி மாணவரின் வகுப்பில் படிக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

இதைக்கண்ட மாணவர் அந்த செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்தார். மேலும், செல்போனை பார்த்தபோது கடைக்கு வந்த ஏராளமான மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து கல்லூரி மாணவர் கடை உரிமையாளரான ராமுவிடம் கேட்டபோது, ராமு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அங்கு வந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து ராமுவை கடுமையாக தாக்கி பந்தயசாலை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் ராமு தனது கடைக்கு வரும் மாணவிகள், பெண்களை செல்போனில் படம் எடுத்து கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...