ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தாராபுரத்தில் பொதுக்கூட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்பாடு!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாயும், அவர்களுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் திருப்பூர் சுடலை தெரிவித்தார்.



திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் தாராபுரம் பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திருப்பூர் சுடலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:



திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பிற்காக ஆதார் உடன் இணைக்க வேண்டும். இந்த அரசு மேலும் என்னென்ன செய்யும் என்பது தெரியவில்லை.

தமிழக அரசு மக்கள் அட்டை என கொண்டு வரவுள்ளது. குஜராத், உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் வடமாநிலத்தவர்கள் இங்கு இருக்கும் அரசு வேலைகளை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 299 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் ஒருவர் கூட தமிழர் இல்லை.

ஸ்டேட் பேங்க் ஆஃப் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட்டது அதிலும் ஒருவர் கூட தமிழர் கிடையாது. அதேபோன்று திருச்சி ரயில்வே பணிமனையில் 1450 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது அதிலும் ஒருவர்கூட தமிழர் கிடையாது. தமிழர் நிலத்தில் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பலாம் என்று பார்க்கும்போது அனைத்து துறைகளிலும் நமக்கான வேலையை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

அதை தடுப்பதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்த விழுக்காடை நாம் பகிர்ந்து கொண்டால் நம்மக்கு உண்டான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக அரசு வருகின்ற காலத்தில் 100% வேலை வாய்ப்பு தருகிறார்கள் என கூறினால் அதை தமிழர்களே 100 சதவீதம் பெறுவதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது.

தமிழர் வேலை தமிழருக்கு என்று கூற முடியும். சென்னைக்கு மோடி வரும்போது எங்களுடைய தலைவர் வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் "கோ பேக் மோடி" என்னும் கருப்பு பலூனை பறக்க விட்டு எதிர்ப்பை காட்டுவோம்.

என்எல்சி நிறுவனத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வேல்முருகன் அதிமுக, திமுக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போராடக் கூடியவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...