சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் - கோவை சவுத் ரோட்டரி கிளப் நிதியுதவி

தமிழகத்தில் சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் வழங்கியது. இந்தக் காசோலை இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும்‌ சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்து மற்றும் அதற்கான உபகரணங்கள், இதயங்கள் அறக்கட்டளை சார்பில் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏழை, எளிய குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான நிகழ்ச்சி ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கோவை மருத்துவ கல்லூரி அருகே நடைபெற்றது.



அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்துகளுக்கான 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இதயங்கள் அறக்கட்டளைக்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் நிர்வாகிகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இதயங்கள்‌ அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ரோட்டரி மூலம் மேற்கொள்ளப்பட்ட இவ்வுதவிக்கு நன்றி. இன்சுலின் தேவைப்படும் 70 குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் ரோட்டரி சார்பில் உதவி அளிக்கப்பட உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் ராஜ்மோகன் நாயர் ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...