கோவையில் ஒரே பதிவு இயக்கப்பட்ட எண்ணில் இரண்டு டூரிஸ்ட் வேன்கள் - வீடியோ வைரல்

கோவை மாவட்டம் சூலூரில் ஒரே எண்ணில் இரண்டு டூரிஸ்ட் வேன்கள் இயக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வாகனங்களை போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், உரிமையாளர் செந்தில்குமார் அந்த வாகனத்திற்கு உரிய உண்மையான எண்ணை அங்கேயே மாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு டூரிஸ்ட் வேன்கள் இயக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அனைத்து டூரிஸ்ட் வேன்களும் பேருந்து நிலையத்தின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்து. அப்போது, ஏதேச்சையாக அந்த வழியாக வந்த ஒருவர், இரண்டு டூரிஸ்ட் வேன்களுக்கு ஒரே பதிவு எண் உள்ளதை பார்த்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவர், 2 டூரிஸ்ட் எண்களையும் படம்பிடித்து சூலூரில் உள்ள சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால், உஷாரான சூலூர் போலீசார் பேருந்து நிலையம் சென்று பார்த்தபோது சமூக வலைத்தளங்களில் வந்திருந்த செய்தி உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, நள்ளிரவில் ரெக்கவரி வேன் மூலம் இரண்டு டூரிஸ்ட் வேன்ங்களையும் காவல் நிலையம் எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த இரண்டு வாகனங்களுக்கும் உரிமையாளர் சூலூரை சேர்ந்த செந்தில்குமார் என்பதும், இவர் ஐந்துக்கும் மேற்பட்ட இதுபோன்ற டூரிஸ்ட் மேக்சி கேப் வாகனங்களை வைத்துக்கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு பிஎஸ்வி பிரைவேட் சர்வீஸ் ஆக ஆட்களை ஏற்றி செல்வதும் பின்பு அழைத்து வந்து வீட்டில் விடுவதுமான பணிக்கு கான்ட்ராக்ட் எடுத்து பல்வேறு நிறுவனங்களில் செய்து வருவதும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, காவல் நிலையம் வந்த செந்தில்குமார் தவறு நடந்து விட்டது என கூறி இரண்டு வண்டிகளுக்கும் வேறு வேறு எண்கள் உள்ளன. ஆனாலும், இன்சூரன்ஸ் டேக்ஸ் பர்மிட் போன்றவை கட்ட முடியாத காரணத்தால் ஒரே பதிவு எண் பயன்படுத்தி இயக்கி வருவதாக பதில் கூறியுள்ளார்.

மேலும், வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள். நான் அபராதம் கட்டிக் கொள்கிறேன் என கூறிய செந்தில் குமார், காவல் நிலையத்தில் வைத்து பதிவு எண் மாற்றப்பட்ட ஒரு வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுபவரை அழைத்து வந்து அதற்கு உண்டான பதிவு எண்ணை காவல் நிலையத்தில் வைத்து மாற்றியுள்ளார். இது அந்த பகுதியாக சென்றவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.

ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு காலையில் ஒரு பதிவு எண்ணும், மாலையில் ஒரு பதிவு எண்ணும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டாக்ஸி ஸ்டன்ட் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கூறுகையில், இதே செந்தில் குமாருக்கு ஐந்திற்கும் மேற்பட்ட மேக்சி கேப் பயணிகள் வாகனம் உள்ளதாகவும், அதை காரணம்பேட்டை லட்சுமி மில், பல்லடம் போன்ற பகுதிகளில் இதே போல் ஆட்களை ஏற்றி பணிக்கு அழைத்துச் செல்லும் கான்ட்ராக்டில் ஈடுபடுத்தி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஏதாவது விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் டாக்ஸ் பர்மிட்டுள்ள ஒரே வண்டியின் ஆர்சி புக்கை காண்பித்து இதுநாள் வரை தப்பித்து வருவதாகவும் அவர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர். காவல் நிலையத்திலும் இதை ஒரு பெரிய குற்றமாக கண்டு கொள்ளவில்லை. பிடிபட்ட வாகனத்தை சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு தபால் எழுதி அனுப்பி வைத்தனர். அவர் இன்சூரன்ஸ் டேக்ஸ் பர்மிட் கட்டவில்லை என 4500 என்ற குறைந்த அளவிலான அபராதத்தை விதித்து அதை வசூல் செய்து கொண்டார்.

இது போன்ற மாபெரும் குற்றங்களை செய்துவருபவர்கள் குறைந்த அபராதத்தை கட்டிவிட்டு மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறும் சக ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், இது போன்ற ஏமாற்று பேர்வழிகளை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தி, அதிக அளவிலான அபராதம் வசூலிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...