அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க மோடி தயாராகிவிட்டார்..! - கோவையில் காங். துணைத்தலைவர் அழகு ஜெயபால் குற்றச்சாட்டு

அதானியை பற்றி மக்களவையில் கேள்வி கேட்டதாலேயே ராகுல்காந்தி குறி வைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதானிக்காக பிரதமர் மோடி ஜனநாயகத்தை அழிக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.


கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அழகு ஜெயபால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க தயாராகி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், அதானியை பற்றி மக்களவையில் கேள்வி கேட்டதால்தான், ராகுல்காந்தி குறி வைக்கப்படுகிறார் என்றும் அழகு ஜெயபால் கூறினார்.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளை பட்டியலிட்ட அவர், சூரத் நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற மேஜிஸ்ட்ரேட் வர்மா முன்னிலையில் விசாரணை விரைவாக நடக்க தொடங்கி 24 நாட்களில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அவசர அவசரமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது எனவும், தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில் மக்களவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டு, பின்னர் தங்கி இருந்த வீட்டை விட்டு வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என எல்லாமே அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பேசியதற்கு, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் எந்த அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது? என கேள்வி எழுப்பிய அழகு ஜெயபால், ராகுல் காந்தி குடியிருப்பது தலைநகர் டெல்லியில் என்றும், சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேறியுள்ளதாகவும் விமர்சித்தார்.

மேலும் மூன்று ஆண்டுகள் கிடப்பிலிருந்த வழக்கு, 24 நாட்களில் விசாரிக்கப்பட்டு அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியது ஏன்? வழக்கு தொடுத்தவரே வழக்கிற்கு எதிராக ஓராண்டு தடைபெற்று திரும்ப அவசர அவசரமாக விலக்கிக் கொண்டது ஏன்? எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார். மேலும் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதி பொறுப்பேற்றார் எனவும் அழகு ஜெயபால் தெரிவித்தார்.

பாஜக அரசின் இத்தகைய சர்வாதிகார பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழிகாட்டுதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீவிரமான பரப்புரை மூலம் மக்கள் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...