செயலிகளை உருவாக்கி கோவை மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் பாரத் கார்த்திக், சமூக வலைதளங்களுக்கான பிரபலமான ஆப்களை உருவாக்கி கம்யூட்டர் துறையில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருதை நோபல் வேர்ல்ட் ரொக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பாரத் கார்த்திக்.



இவர் அங்குள்ள பள்ளியொன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கணினி தொடர்பான துறைகளில் பாரத் கார்த்திக் அதிக ஆர்வம் காட்டினார். அவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர் அவருக்கு லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்தனர்.

பள்ளி மாணவரான பாரத் கார்த்திக், தற்போது கோவையில் உள்ள சில கல்லூரிகளில் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். தாம் உருவாக்கிய செயலியைப் பற்றிப் பேசிய பாரத் கார்த்திக், இந்த செயலியின் மூலம் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளை பெற்றோரால் நேரடியாகக் கண்காணிக்க முடியும். மாணவர்களின் தேர்வு மற்றும் பிற செயல்பாடுகளையும் இதன் மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும், என்றார்.

இளம் வயதிலேயே பாரத் உருவாக்கிய அப்ளிகேஷன்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கணினி துறையில் சாதனை படைத்துள்ள அவருக்கு இளம் தொழில்முனைவோர் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (NWR) அமைப்பின் பிரதிநிதி தியாகு நாகராஜ், மாணவர் பாரத் கார்த்திக்றகு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அவரது வீட்டிற்கே சென்று வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...