உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா - கொடியேற்றத்துடன் துவக்கம்!

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியுள்ளது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியுள்ளது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6ஆம் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



தேவாங்கர் சமூகத்தின் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக தளி சாலையில் பூமாலை சந்து பகுதியிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



பின்னர் மஞ்சள் துணியாலான கொடி மாரியம்மன் உருவப்படத்துடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கொடி மரத்துக்கு முன்பு ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கையில் பூவோடு ஏந்தி சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுலவர் வெ.பி.சீனிவாசன், யூ.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.சீனிவாசன், அறங்காவலர் கிருஷ்ணராஜ், வி.பி.எஸ்.ஆர்.பிரகாஷ், கொங்கு ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...