புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை - கோவையில் நகை வணிகம் அதிரடியாக சரிவு!

கோவையில் தினமும் ரூ. 60 கோடி மதிப்பிலான 100 கிலோ எடையளவு நகை வணிகம் நடப்பது வழக்கம். விலை உயர்வு காரணமாக தற்போது 20 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.12 கோடி மதிப்பிலான வணிகம் மட்டுமே தினமும் நடப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தின் மிகமுக்கிய தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது. முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள் 3,000 பேர், உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள் 10,000 பேர், தங்கத்தை வாங்கி நகை செய்து தரும் பட்டறை தொழிலில் 45,000 பேர் உள்ளனர்.

நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் கோவையில் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், கோவையில் தினமும் ரூ. 60 கோடி மதிப்பிலான 100 கிலோ எடையளவு நகை வணிகம் நடப்பது வழக்கம். விலை உயர்வு காரணமாக தற்போது 20 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.12 கோடி மதிப்பிலான வணிகம் மட்டுமே தினமும் நடக்கிறது.

தங்கத்தின் விலை குறைந்தாலும் அது மிகவும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும். மீண்டும் உயரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலை நீடித்தால் தங்க நகை தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும், என்றார்.

கோவை சந்தையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம் - (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்)ஏப்ரல் 4-ம் தேதி - ரூ. 44,400.

ஏப்ரல் 5-ம் தேதி - ரூ. 45,360. ஏப்ரல் 6-ம் தேதி - ரூ. 44,800.

ஏப்ரல் 7-ம் தேதி - ரூ. 44,800 (ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ. 46,160)

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...