பல்லடம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கழிவுகள் குட்டையில் வெளியேற்றம் - மண்ணை கொட்டி மூட வந்த டிராக்டர்கள் பறிமுதல்!

பல்லடம் அருகே பாச்சா கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலைக்கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மண்ணைக் கொட்டி மூட வந்த 2 டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த பாச்சா கவுண்டம்பாளையத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து, கழிவுகளை குட்டையில் திறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாகவுண்டம் பாளையத்தில் ஆலை கழிவுகள் சுத்திகரிக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.



15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அருகில் உள்ள குட்டையில் கலப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் இன்று அதிகப்படியான கழிவு நீர் வெளியேற்றப்பட்டதை மறைக்க சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இரண்டு டிராக்டர்கள் மூலம் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி உள்ளனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் இரண்டு டிராக்டர்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையிலிருந்து குட்டையில் கலப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை மறைப்பதற்காக மண்ணை கொட்ட வந்த இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, தொடர்ச்சியாக ஆலை கழிவுகளை குட்டையில் கலப்பதால் ஆடு, மாடுகள் இந்த நீரை குடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. கால்நடைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...