இரும்பு உருக்கு ஆலை விவகாரம்: 23 நாளாக தொடரும் போராட்டம் - 21 பேர் அடையாள உண்ணாவிரதம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக 23வது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பேர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் இரும்பு உருக்காலைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் என 21 பேர் இணைந்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஊருக்குள் பந்தல் அமைத்து 23வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனுப்பட்டி கிராம மக்கள் இன்று குழந்தைகள், பெண்கள் உட்பட 21 பேர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தற்காலிகமாக இரும்பு உருக்கு ஆலையை மூட வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில் நிரந்தரமாக ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.



மேலும் இன்று நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

மேலும் நீதிமன்றத்தில் ஆலையை மூட வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாறாமல் இருக்க ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...