சூலூரில் 452 கிலோ குட்கா பறிமுதல் - வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

சூலூர் அருகே குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்தனர்.



கோவை: சூலூர் அருகே குட்காவை பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்த போலீசார், 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு கடைகளுக்கு குட்கா சப்ளை செய்யப்படுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பள்ளபாளையம் ஆவின் டீக்கடை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 452 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.



மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கார்களில் குட்காவை கடத்தி வந்து உள்ளூர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்த ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகன்லால் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...