உதகையில் சுற்றுலா வாகனங்களில் காவல்துறை சார்பில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவாகவும், பண்போடும் நடந்துகொள்ளவும், அதிக வாடகை வசூலிக்க கூடாது என வலியுறுத்தி உதகை நகர காவல்துறை சார்பில் சுற்றுலா வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நீலகிரி: உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக வாடகை வசூலிக்க கூடாது என சுற்றுலா வாகனங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் ஆகும். இச்சமயங்களில் உதகைக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் உதகையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதனையடுத்து உதகை சேரிங்கிராசில் சுற்றுலா மேக்ஸி கேப் ஒட்டுநர்கள் சங்கம் சார்பில் உதகை நகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமையில், சுற்றுலா வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

இதன் பின்னர் அவர் கூறுகையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். அதிக வாடகை வசூலிக்க கூடாது. சுற்றுலா பயணிகள் தவற விடும் செல்போன்கள் மற்றும் பொருட்களை கண்டெடுத்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...