ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை ரத்து செய்க! - காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், MP பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மோடிக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...