தாராபுரம் நகராட்சியில் சிறப்பு துப்புரவு பணி - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்!

தாராபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ‘என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணி மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சியில் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "என் குப்பை என் பொறுப்பு" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி மற்றும் நகர் மன்றம் இணைந்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற திட்டம் குறித்து நகர பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாராபுரம் நகராட்சி என்.சி.பி ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையேற்று இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் 25க்கும் மேற்பட்டோரும், நகர் மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் ஆகியோரும் ஒரே இடத்தில் கூடி நகராட்சி பள்ளியை அடுத்த உழவர் சந்தை செல்லும் சாலையில் அப்பகுதி வியாபாரிகளாலும் பொதுமக்களாலும் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கூலங்கள் அனைத்தையும் மாஸ் கிளீனிங் முறையில் முற்றிலுமாக அகற்றி தூய்மைப்படுத்தினர்.



தொடர்ந்து “என் குப்பை என் பொறுப்பு” என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை நகர மன்ற தலைவர், குடியிருப்பு வாசிகளுக்கும் அவ்வழியாக சென்ற பொது மக்களுக்கும் வழங்கினார்.

பின்னர், உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



இதனால் உங்கள் பகுதியில் நோய் பரவலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பதுடன் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ரவிச்சந்திரன் வார்டு கவுன்சிலர்கள் சீனிவாசன், முபாரக் அலி, மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...