தாராபுரம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - இருவர் கைது!

தாராபுரம் அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்களது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தாராபுரம் புறநகர் பகுதியான அசோக் நகரில் செல்லத்துரை என்பவரது வீட்டிலும், கணபதி நகரில் ஜீவானந்தம் என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டிலும், ஜோதி நகரில் தங்கவேல் என்பவரது வீட்டிலும் கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில், கலைச்செல்வன், வெங்கடேசன், வேலுமணி, பாலசுப்பிரமணி உள்ளிட்ட தனிப்படை போலீசார் அடங்கிய குழுவினர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிவேகமாக வந்த 2 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் திருப்பூர் பொன் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது.

இவர்கள், மேலும் இரண்டு கூட்டாளிகளுடன் தாராபுரம் பகுதியில் காலை முதல் பிற்பகல் வரை நோட்டமிட்டு பூட்டி இருக்கும் வீடுகளை கண்காணித்து கதவை உடைத்து வீட்டில் இருந்த தங்க நகைகள், ரொக்க பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 4 பேர் கொண்ட குழுவாக தங்கியிருந்த இவர்களில் உடுமலையை சேர்ந்த காஜாமைதீன் மகன் முஹம்மது ரபிக் (29) என்பவர் ஏற்கனவே 9 வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

மேலும், உடுமலையில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் உடுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரியவந்தது.

போலீசாரின் பிடியில் சிக்கிய இருவரும் குன்னத்தூர் தாளபதி பகுதியை சேர்ந்த அப்துல் குத்தூஸ் மகன் இம்ரான் (34), தர்மபுரியை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கவியரசன் (24) என்பதும் தெரியவந்தது.



இவர்களது மற்றொரு கூட்டாளி தலைமறைவாக உள்ள நிலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கவியரசன் மற்றும் இம்ரான் ஆகியோரின் தகவலின் பேரில் அவர்களிடமிருந்த 10 சவரன் தங்க நகைகள் 70 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய செல்போன் மற்றும் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.



மேலும், பிடிபட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். முபாரக் அலி, மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...