உடுமலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.



ஆயர் மேரி செல்வராணி முதலாம் ஆராதனையிலும், ஆயர் லூத் இரண்டாம் ஆராதனையும் நடத்தி சபை மக்களிடம் நற்செய்தியை கூறினர்.



இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.

அதேபோல் உடுமலை பழனி சாலையில் உள்ள கிறிஸ்தவ நாதர் ஆலயத்தில் ஆயர் செல்வராஜ் ஆராதனை நடத்தினார்.



உடுமலை அருகில் உள்ள பள்ளபாளையம் கிராமத்திலும், புக்குளம் கிராமத்திலும் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...