கோவை அருகே அங்காளம்மன் திருக்கோவில் பூக்குண்ட திருவிழா - நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

கோவை குப்பிச்சிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர்.


கோவை: கோவை மாவட்டம் குப்பிச்சிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் பூக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில் பூக்குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை சக்தி கரம் அழைத்தலைத் தொடர்ந்து பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள், அன்னதானம் மற்றும் பரிவேட்டை நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...