ராமநவமி ஊர்வல வன்முறை மற்றும் இத்ரீஸ் பாஷா கொலையை கண்டித்து கோவையில் SDPI ஆர்ப்பாட்டம்

வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்தும், கர்நாடகாவில் மாடுகளை ஏற்றி சென்ற இத்ரீஸ் பாஷா கொல்லப்பட்டதை கண்டித்தும் கோவையில் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு மதப் பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சசாராம் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். அதையடுத்து மாநிலத்தின் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் சில தினங்களுக்கு முன் சாந்தனூர் காவல் நிலையம் அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற போது பசு பாதுகாப்புக்குழு என்ற கும்பல் இத்ரீஸ் பாஷா உட்பட சிலர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இத்ரீஸ் பாஷா உயிரிழந்தார்.



இந்த இரண்டு சம்பவங்களை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் SDPI கோவை மத்திய மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இச்சம்பவங்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...