இரும்பு உருக்காலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் - தனியரசு ஆதரவு!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்தித்து கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆதரவளித்தார்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் போராட்டத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆதரவு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊருக்குள் பந்தல் அமைத்து 24வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனுப்பட்டி கிராம மக்கள், நேற்று குழந்தைகள், பெண்கள் உட்பட 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தற்காலிகமாக இரும்பு உருக்கு ஆலையை மூட வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில், நிரந்தரமாக ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.



இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டம் பந்தலுக்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் கிராம மக்களோடு போராட்ட பந்தலில் அமர்ந்து ஆலையை மூடக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனியரசு பேசியதாவது, அனுப்பட்டி கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களது கோரிக்கையை துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆலையை மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...