அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்..! - கலைஞர்கள் கோரிக்கை

கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம். தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாக மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் தெரிவித்தனர்.



பல்லடம்: அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கும்மியாட்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் இன்று மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் 54ஆவது அரங்கேற்ற விழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள்,ஆண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் கும்மியடித்து மகிழ்ந்தனர்.



முருகப்பெருமான் வள்ளியை எப்படி மணம் முடித்தார் என்ற கதையினை 30 பாடங்களாக பிரித்து நான்கு மணி நேரம் பாடலாக படித்து அவர்கள் கும்மிடியத்து நடனமாடினர். ஒரே சீருடையில் 300-க்கும் மேற்பட்டோரின் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிய கும்மியாட்டக் குழுவினர், கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம் எனவும் தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் நடைபெறும் அணிவகுப்புகளில் கும்மி ஆட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கும்மியாட்ட குழுவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...