பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை - கவுண்டம்பாளையம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையோடு பாத பூஜை செய்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.



பல்லடம்: பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை செய்து கவுண்டம்பாளையம் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பன்னிரண்டார் தீர்த்தக்காவடி குழுவின் சார்பில்114 தீர்த்தக் காவடியுடன் 11 நாட்கள் பாதயாத்திரையாக பெருந்துறை, ஊத்துக்குளி வழியாக பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். தீர்த்த காவடி உடன் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு கவுண்டம்பாளையம் ஊர் மக்கள், மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.



கவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வரை கோமாளி வேடமணிந்து, நடனம் ஆடியபடி பக்தர்களை ஊர்மக்கள் அழைத்துச் சென்றனர். இரவு மாகாளியம்மன் கோவிலில் தீர்த்த காவடிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. ஓய்வுக்காக கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் இரவு தங்கினர்.



இன்று மீண்டும் தீர்த்தக்காவடிகளுடன் தாராபுரம் வழியாக சித்திரை 1ஆம் தேதி பழனி முருகன் கோவிலை சென்றடையும்படி பாதயாத்திரையை பக்தர்கள் தொடங்கினர். 114 தீர்த்தக்காவடியுடன் பக்தர்கள் வரிசையாக பாதயாத்திரை வந்த நிகழ்வு காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...