கோவையில் பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் -ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

கோவையில் பி.எஸ்.ஜி மருத்துவமனையுடன் பாஜக இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது. இதில், வடமதுர, என்.ஜி.ஜி.ஓ., காலனி, துடியலூர், பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.



கோவை: பாஜக சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம், துடியலூரில் நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி கேட் அருகே ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவு பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு மண்டலம் மற்றும் பி.எஸ்.ஜி.மருத்துவமனை ஆகியோர் இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தியது.



இதில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகல் நலம், தோல் நல சிகிச்சை, எலும்ம்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை, கண் நலம், கண் புரை அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை மற்றும் பல் நலம் குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கினர்.



இந்த மருத்துவ முகாமில், வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்.



இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ பிரிவு மாநில செய்லாளர் டாக்டர்.பாபு, மாவட்ட தலைவர் டாகடர். சுரேந்திரன் முன்னிலையில் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரன், மருத்துவ பிரிவு டாக்டர்.மகேஸ்வரன் மற்றும் பொருளாளர் சண்முகவடிவேல், செயலாளர்கள் உதயகுமார், பிரபாவதி, ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சாய்சரவணகுமார் உட்பட பலர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...