கோவை ரேஸ்கோர்ஸில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்..! - மாநகர போலீசார் உறுதி!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்பட்டது. அப்போது மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சாலைகளில் பேரிகாடுகள் அமைக்கப்படும் என மாநகர போலீசார் உறுதி அளித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகர காவல் துறை உறுதி அளித்துள்ளது.

கோவை மாநகரம் முழுவதும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கியமான வீதிகள், குடியிருப்புகளில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியதோடு, அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



அதன்அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி வீதியில் உள்ள குடியிருப்பில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி குடியிருப்பு மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.



இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சார்பாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத்,போலீசாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பார்க்கிங் பிரச்சனை உள்ளதால் பார்க்கிங் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்வோருக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதை அடுத்து பேசிய உதவி ஆணையர் சுரேஷ் குமார் கூறியதாவது, மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், பேரிகாடுகள் மூலம் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...