மா சாகுபடியில் பூ உதிர்தல் அதிகரிப்பு - கவலையில் உடுமலை விவசாயிகள்!

நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே மா சாகுபடியில் பூ உதிர்தல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு உள்ளது.

மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்கு ரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும், இறவையாகவும், பல்வேறு ரக மாமரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் ஆண்டுக்கு இரண்டு சீசன்களில், மாங்காய் உற்பத்தி இருக்கும். அதில், சித்திரை பட்டம் எனப்படும் கோடைகால சீசனே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.



இந்த நிலையில் நடப்பாண்டு கோடை வெயில் முன்னதாகவே துவங்கி, கொளுத்தி வருவதால், மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் உட்பட காலநிலை மாற்றங்களால், மாமரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்துள்ளது. மேலும் நோய் தாக்குதலும் பரவலாக உள்ளது.

கிணற்று பாசன விளை நிலங்களில், சொட்டு நீர் மூலமாக தண்ணீர் பாய்ச்சினாலும், மரங்களில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

இதனிடையே மாங்காய் நல்ல திரட்சியாகும் முன்பே, வெம்பி, கீழே விழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...