வால்பாறை அருகே இறந்தநிலையில் ஆண்யானை மீட்பு - உடற்கூறு ஆய்வில் புதிய தகவல்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனபகுதியில் இறந்த நிலையில் ஆண்யானையின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில், யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே இறந்த நிலையில் ஆண் யானை மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேபூனாச்சி செட்டில்மென்ட் வன பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் ரோந்து பணி சென்றபோது,யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இறந்து பல நாட்களான நிலையில் கிடந்த யானையின் உடலை,ஆனைமலை புலிகள் காப்பகம்கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் மருதுவ குலு, ACF செல்வன், வால்பாறை வனச்சரக அலுவலர்அகியோர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்தனர்.அப்போது, யானையின் தந்தம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.



உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், இறந்த யானை மற்றொரு யானையுடன் சண்டையிட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யானை வேட்டையாடப்பட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இறந்த யானை சுமார் 37-42 வயது இருக்கும் என்றும்,உடற்கூறு ஆய்வு முடிந்து சடலம் இயற்கையான சிதைவுக்காகவும் (decompose), மற்ற உயிரினங்களுக்கு உணவாகும் வகையில்விடப்படுவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...