உடுமலையில் பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சி - கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

உடுமலையில் உள்ள ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து நடத்திய பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சியில் ஏராளமான மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பெயர்களை பதிவு செய்தனர்.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற பேரிடர் வழிகாட்டுதல் பயிற்சியில் கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லுாரி சார்பில் பேரிடர் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சேவா சமிதி மாவட்ட குழு நிர்வாகத்தினர் பேரிடர் வழிகாட்டுதல் குறித்து பேசினர். தொடர்ந்து, பேரிடர் காலத்தின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து, கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்விற்கு கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, தேசிய மாணவர் படை இயக்குனர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் மற்றும் தேசிய மாணவர் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தங்கள் பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...