பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் 20 மரங்களை வெட்டிய மின்வாரிய ஊழியர்கள் - விவசாயி புகார்!

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் விவசாய தோட்டத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்திய மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் காவல் நிலையத்தில் விவசாயி புகார் அளித்துள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் இருந்த 20 மரங்களை வெட்டிய மின்வாரிய ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையகவுண்டர் என்பவரது மகன் வேலுச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், மழை பொய்த்துப் போனதால் தற்போது தரிசு நிலமாக உள்ளது.



இந்த நிலையில் வேலுச்சாமி குடும்பத்துடன் காளி வேலம்பட்டியில் வசித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தனது தோட்டத்திற்கு சென்று வருவது வழக்கம். இதனிடையே, இன்று வேலுச்சாமி தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது வேப்பமரம், வெள்ளவேலாம்மரம், கிளுவை மரம் போன்ற 20 மரங்களை மர்மநபர்கள் வெட்டியது தெரியவந்தது.

இந்நிலையில் அருகில் மின் ஒயர்கள் செல்வதால் சந்தேகத்தில் அய்யம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலக அதிகாரிகளை விவசாயி வேலுச்சாமி நாடியுள்ளார்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் வேலுச்சாமி கேட்டபோது "உங்களது பக்கத்து தோட்டத்துக்காரர் மோகன் என்பவர்தான் மரங்களை வெட்ட சொன்னார் என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.



எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி வேலுச்சாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ஆசையாக வளர்த்த மரங்களை இது போன்று வெட்டி வீழ்த்தினால் சாதாரண விவசாயி என்ன செய்ய முடியும். மழை பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் தரிசு நிலத்தில் மரங்களை வளர்த்தால் இதுபோன்று குட்டச் சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயி வேலுச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...