திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் - அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பால் பரபரப்பு!

திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனறும் கூறி அதிமுக உறுப்பினர்கள் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் பேச நேர ஒதுக்கப்படவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 121 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட பட்ஜெட் குறித்து அதிமுகவை சேர்ந்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேசினார். அப்போது, இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டில் அம்மா உணவகத்திற்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் குப்பை வரி உயர்த்தப்பட்டதாக ஆட்சேபனை தெரிவித்தார்.



இதற்கு மேயர் பதிலளித்து பேசிக் கொண்டிருந்த போது அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்த வரி உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்கிறதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இந்நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி மேயர் பேசுவதற்கு உரிய நேரம் வழங்கவில்லை என்றும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மாற்றுக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதில் அளிப்பதாக குற்றம் சாட்டி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரின் இருக்கைக்கு முன்பாக சென்று மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



இதனால் மாமன்ற கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி வெளிநடப்பு செய்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி மாமன்ற கூட்ட மாண்பை மதிக்காமல் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரின் இருக்கைக்கு முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் உரிய பதில் வழங்கப்பட்டு வருகிறது.

குப்பை வரி உயர்வு குறித்து மறுபரிசீலனைக்கு தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...