உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கான இளஞ்சூடு ஏற்றும் விழா

உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவையை தொடங்க பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்நிலையில் 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவைக்கான பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஆலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், விவசாயிகள் ஆலை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகளை சூழ்ந்து கொண்ட விவசாயிகள், இந்த ஆலை திடீரென அரவையின் போது பழுதாகி விடுகிறது. இதனால் கரும்பு அறுவடை செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரவை துவங்கியவுடன் ஆலை எந்த தங்கு தடையும் இன்றி இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகிகள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழைய உபகரணங்களை கொண்டு இந்த ஆலை இயங்கி வருகிறது. எப்பொழுது எது பழுதடையும் என்பது தெரியாமல் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.

முடிந்தவரை தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இந்த ஆலை நிற்காமல் இயங்க உறுதுணையாக இருப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

வருகின்ற 21ஆம் தேதி நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை துவங்கும் என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...