திருப்பூர் அருகே கொண்டத்து காளியம்மன் கோவிலில் 300 அடி மேற்கூரை சரிந்து விபத்து - மூவர் காயம்!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட 300 அடி மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



திருப்பூர்: அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் அருகேயுள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட மேற்கூரை சரிந்து 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக தற்காலிகமாக 300-கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருவிழா முடிந்து கடைக்காரர்கள் ஒவ்வொருவராக கடைகளை அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென 300 அடி நீளமுள்ள மேற்கூரை சரிந்து விழுந்தது.



பெரும்பாலான கடைகள் ஏற்கனவே காலி செய்து கொண்டிருந்த நிலையில். தற்போது, சுமார் 150 கடைகளில் இருந்த பொருட்கள் மட்டுமே காலி செய்து வருவதால், அந்த கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. முதியவர் மற்றும் 2 பெண்கள் என 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.



தகவலறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழா முடிவடைந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே பந்தல் ஒப்பந்ததாரர் முறையாக பந்தலை அமைக்கவில்லை என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...