உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: சீர் வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவிற்காக அம்மனுக்கு சாத்துவதற்கு பட்டுச்சேலை, சீர்வரிசை தட்டுடன் வந்த பூர்வீக பள்ளி ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர், அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக பட்டுசேலை மற்றும் சீர்வரிசை தட்டுடன் வந்த இஸ்லாமியர்களை கோவில் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.



இந்நிலையில், தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில், உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் அம்மனுக்கு சாத்துவதற்காக பட்டுச்சேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது, கோவில் நிர்வாகிகள் அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்

இந்த திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, பக்தியுடன் வடம் பிடித்து தேர் இழுக்கும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா அனைத்து மத ஒத்துழைப்புடன் அனைவரும் கொண்டாடும் திருவிழாவாக திகழ்ந்து வருகிறது.

அதற்கு காலம் காலமாக தாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இந்த வருடமும் தேர்திருவிழா சிறப்படைய வாழ்த்துகளை தெரிவிக்க வந்ததாகவும் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

தேர்திருவிழா சிறக்க வாழ்த்திட வந்த இஸ்லாமியர்களின் செயலும், அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்த நிர்வாகிகளின் அன்பும், மதங்களை கடந்த மத நல்லிணக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...