கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தலைமையில் நடைபெறுகிறது. உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் மற்றும் அரசு உதவிகள் வழங்கப்படும்.


Coimbatore: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூலை 10, 2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தலைமையில் நடைபெற உள்ளது.




இம்முகாமில் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.




அரசு ITI, Polytechnic மற்றும் அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, துணை மருத்துவம், சட்டம் போன்ற கல்லூரிகள் சார்ந்த சேர்க்கை தகவல்களை பெற்று பயன்பெறலாம். கல்விக்கடன் சார்ந்த உதவிகளையும் பெற்றிடலாம்.




முகாமில் பங்குபெறும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான வங்கி கணக்கு புத்தகம், ஆதார், சாதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை போன்றவைகளை தவறாமல் எடுத்துவர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பன்னர் தெரிவித்துள்ளார்.




சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 9487047568, 9788858829, 8754898863.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...