கோவை சூலக்கல் மாரியம்மன் கோவில் பாதிக்காத வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!

கோவை சுங்கம் பகுதியில் பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலைக்கு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


கோவை: சுங்கம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் பாதிக்காத வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார்.

அப்போது தியாகி சிவராம் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்கள் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக சுங்கம் சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த நிலையில் சுங்கம் பைபாஸ் ரோட்டின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது. இந்த சர்வீஸ் சாலை அமைக்கும் பொழுது கோவிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல் ஸ்ரீ கிருஷ்ண சேனா மக்கள் இயக்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,தடாகம் சாலையில் கடந்த ஓராண்டு காலமாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 20 தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

இதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், தொழிற்சாலை செல்லும் தொழிலாளர்களுக்கும் இந்த சாலையில் சென்று வருவது பெரிய சவாலாகவே உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அவ்வப்போது விபத்துகள் நடக்கிறது.

மேலும் கோவில்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த சாலை பணியை பள்ளி விடுமுறை காலம் முடிந்து தொடங்குவதற்கு முன் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...