பல்லடம் காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்ட பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருடிச்சென்ற நபரில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் ஞான பிரகாஷ். இவர் சின்னிய கவுண்டம்பாளையத்தில் சொந்தமாக மின்சாதன கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடையில் பணிபுரியும் ராம்கி என்பவர் இன்று மாலை ஞானபிரகாஷின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மற்றொரு மின்சாதன கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.



ராம்கி கடையில் பொருட்களை வாங்கி முடித்ததும் இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இரண்டு முறை இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பல்லடம் காவல் நிலையத்திற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையத்தின் எதிரில் கூட வாகனத்தை நிறுத்த பாதுகாப்பு இல்லாத சூழல் பல்லடத்தில் நிலவுவதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...