கோவையில் மனநல பாதிப்புடன் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர் - சிகிச்சை அளித்து உறவினர்களிடம் ஒப்படைப்பு!

கோவையில் மனநல பாதிப்புடன் சுற்றித்திரிந்த சட்டீஸ்கரை சேர்ந்த ஜித்தேந்தர் எனும் இளைஞரை மீட்ட உதவும் கரங்கள் அமைப்பு, அவருக்கு 4 ஆண்டுகள் சிகிச்சை அளித்தது. குணமடைந்து நினைவு திரும்பியதும், இளைஞரை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் மனநலம் பாதிப்புடன் சுற்றி திரிந்த வட மாநில இளைஞர் மீட்கப்பட்டு 4 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சட்டீஸ்கர் மாநில போலீஸ் காவலரான அவரது சகோதரரிடம் ஒப்படைப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் உதவும் கரங்கள் என்ற தன்னார்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது, மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டு, சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அமைப்பினர், கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 700 பேரை மீட்டு சிகிச்சையளித்து பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு தானே பேசியவாறு சாலையில் மோசமான நிலையில் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞர் ஒருவரை இந்த அமைப்பினர் மீட்டனர். அவருக்கு உணவு, உடைகள் வழங்கி, மனோ தத்துவ நிபுணர்கள், மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் அவர் குணமடைந்து பழைய நினைவுகள் வந்துள்ளது. விசாரித்ததில் அவர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கோபால் நிஷாத் என்பவரது மகன் ஜித்தேந்தர் (34) என்பது தெரியவந்தது.



இதையடுத்து தன்னார்வ அமைப்பினர் இணைய தளம் மூலம் ஜிதேந்தர் கூறிய அடையாளங்களை வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து பேசிய போது, ஜித்தேந்தர் சகோதரர் சட்டீஸ்கர் மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஜிதேந்தர் அவரது சகோதரர் தான் என்பது தெரியவந்தது. கடந்த 2015-ல் வீட்டில் இருந்த ஜித்தேந்தர் மாயமாகியுள்ளார். இது குறித்து உள்ளூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என உறவினர்கள் எண்ணிய நிலையில், தற்போது அவர் கோவையில் மீட்கப்பட்டு, உடல் நலத்துடன் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

நான்கு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜிதேந்தரை சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து அழைத்து செல்ல வந்த அவரது சகோதரர் தேவேந்திர நிஷாத் தனது சகோதரரை கண்டதும் கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து அவர் எடுத்து வந்த ஆவணங்களை ஒப்படைத்த பின் ஜித்தேந்தரை அவரது அண்ணணிடம் ஒப்படைத்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் ஜித்தேந்தர் தனது சொந்த ஊரான சட்டீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...